Advertisement

ஜே.இ.இ. மெயின் தேர்வு 2-வது அமர்வின் முடிவுகள் வெளியீடு

By: vaithegi Mon, 08 Aug 2022 3:25:56 PM

ஜே.இ.இ. மெயின் தேர்வு 2-வது அமர்வின் முடிவுகள் வெளியீடு

இந்தியா: நாட்டிலுள்ள 31 தேசிய தொழில்நுட்பக் கழகம், இந்திய பொறியியல் அறிவியல் தொழில்நுட்பக் கழகம், 26 தொழில்நுட்ப நிறுவனங்களின் (IIITs) மற்றும் மத்திய அரசின் இதர தொழில்நுட்பம் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை JEE தேர்வை நடத்துகிறது.

மேலும் இந்த JEE முதன்மை தேர்வின் அடிப்படையில் தான் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டு வருகிறது. 2022- 23 கல்வியாண்டில் JEE முதன்மைத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதாவது, JEE முதன்மை அமர்வுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து இரண்டாம் அமர்விற்கான JEE தேர்வு ஜூலை 25 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும், இரண்டாம் அமர்விற்கான JEE Main 2022 விடை குறிப்புகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விடைகுறிப்பில் ஏதேனும் பிழைகள் இருந்தால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரைக்கும் திருத்திக்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று JEE முதன்மைத் தேர்வு அமர்வு இரண்டிற்கான மதிப்பெண் பட்டியலை NTA இன்று வெளியிட்டுள்ளது.

jee,results ,ஜே.இ.இ,முடிவுகள்

JEE முதன்மை தேர்வு முடிவை jeemain.nta.nic.in 2022 மற்றும் ntaresults.nic.in 2022 என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வாளரின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து JEE முதன்மைத் தேர்வின் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,50,000 பேர் JEE மேம்பட்ட தேர்விற்கும் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவை தெரிந்துகொள்ள முதலில், jeemain.nta.nic.in 2022 என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று JEE முதன்மை அமர்வு 2 முடிவு இணைப்பு என்பதை கிளிக் செய்யவும். பின்பு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

Tags :
|