Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்வு

By: vaithegi Sat, 25 June 2022 12:31:38 PM

சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்வு

சென்னை: கடந்த 23ம் தேதி அன்று தங்கத்தின் விலை சவரன் ரூ.80 குறைந்து ரூ. 38,120க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,765க்கும் விற்பனையானது. இதே போல் நேற்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,745க்கும் அத்துடன் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.37,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதனால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரனுக்கு ரூ.38,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold,silver,chennai ,தங்கம்,வெள்ளி,சென்னை

தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 4,755க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 காசு குறைந்துள்ளது.

அதன்படி ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.65.70க்கும் மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.a

Tags :
|
|