Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது

By: Nagaraj Thu, 16 Feb 2023 10:44:37 PM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது

சென்னை: தங்கம் விலை குறைந்தது... சென்னையில் 22 காரட் ஆபரணத்தின் விலை ரூ.280 குறைந்து ரூ.42,240 ஆக உள்ளது. பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் தங்க விற்பனை நன்றாக இருக்கும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நாளில் இருந்து, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு அறிவிப்பின் எதிரொலியாக நகைகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.

chennai,gold price,less , குறைவு, சென்னை, தங்கம் விலை

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்து ரூ.42,240 ஆக உள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,280 ஆக இருந்தது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.71.80 ஆக உள்ளது. இதனால் சராசரி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags :