Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்வு

By: vaithegi Fri, 01 July 2022 12:30:50 PM

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்வு

சென்னை: சமீப காலமாக தங்க நகை மார்க்கெட்டில் ஏற்படும் லாப, நஷ்டங்கள், போர் விளைவுகள் எல்லாம் ஆபரணத்தங்கத்தின் தொடர்ச்சியாக விலையை ஏற்ற, இறக்கம் செய்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் எப்போது தங்கத்தை வாங்குவது என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

காலை விற்பனையில் குறைந்திருக்கும் ஆபரணத்தங்கத்தின் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களை பெரும் அதிருப்தியாக்கி வருகிறது.

customer,jewellery ,வாடிக்கையாளர்,ஆபரணத்தங்கம்

அதனால் நகை வாங்க செல்லும் முன் அன்றைய நாளுக்கான விற்பனை விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லதாகும்.

அதனால் சென்னையில் இன்றைய விற்பனையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 என மிக அதிரடியாக உயர்ந்துள்ளது. மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ.4,785க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு சவரன் நகை ரூ.38,280க்கும் விற்பனை செய்யபகிறது.

Tags :