Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரைவில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது

விரைவில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது

By: vaithegi Wed, 03 Aug 2022 1:38:35 PM

விரைவில்  ஜியோ நிறுவனம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது

இந்தியா: இந்தியாவின் முதல் 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் போன்ற 4 நிறுவனங்கள் பங்கேற்றன. நேற்றுடன் ஏலம் முடிவடைந்துள்ளது.

மேலும் 7 நாட்கள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் அதிக ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏலத்தில் சுமார் 88,078 கோடி ரூபாய்க்கு ஜியோ நிறுவனம் 5 ஜி ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது.மேலும் ரிலையன்ஸ் ஜியோ-வை தொடர்ந்து சுனில் மிட்டல்-ன் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை பல்வேறு பேண்டுகளில் கீழ் சுமார் 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக் கைப்பற்றி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

5g service,jio ,5ஜி சேவை,ஜியோ

இதை அடுத்து ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டு மடங்கு அதிகத் தொகையை முதலீடு செய்து அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது. இந்த ஏலத்தில் ஜியோ யாரும் எதிர்பார்க்காத வகையில் 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz மற்றும் 26GHz பிரிவில் அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது.

மேலும் ஜியோ நிறுவனம் மிக விரைவில் 5ஜி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர நாளன்று ஜியோவின் 5ஜி சேவை தொடங்கப்படலாம் என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி சிறிய ஹின்ட் கொடுத்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் அம்பானி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியாவின் 5ஜி பயணத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ தலைமை வகிக்கும் எனவும், வரும் சுதந்திர தினத்தை நாடு முழுவதும் 5ஜி சேவை தொடக்கத்துடன் நாம் கொண்டாடுவோம் எயாரும் தெரிவித்துள்ளார். எனவே, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்ட நாளன்று ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் என தகவல்கள் கூறுகின்றன.

Tags :