Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தன் அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்ட ஜோபிடன்

தன் அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்ட ஜோபிடன்

By: Nagaraj Tue, 24 Nov 2020 4:07:17 PM

தன் அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்ட ஜோபிடன்

அமைச்சரவை பட்டியல் வெளியீடு... அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடன், வெளியுறவுத் துறை உள்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலை அறிவித்துள்ளார்.

இதன்படி, ஆன்டனி பிளின்கென் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ஜாக் சல்லிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

jobidan,cabinet,announcement,united states,president ,ஜோபிடன், அமைச்சரவை,அறிவிப்பு, அமெரிக்கா, ஜனாதிபதி

முன்னாள் அமெரிக்க தலைமை தூதர் ஜோன் கெர்ரியை ஜோ பிடனின் சிறப்பு தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக அலெஜான்ட்ரோ மயோர்காஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் துணை சிஐஏ இயக்குநரான அவ்ரில் ஹைன்ஸ் தேசிய புலனாய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை உறுப்பினர் அந்தஸ்துடன், லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் ஐக்கிய நாடுகள் சபையில் தனது தூதராக பணியாற்ற பரிந்துரைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியான ஜோ பிடன், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

Tags :