Advertisement

ஜோ பைடன் மோசடி செய்துள்ளார்... டிரம்ப் குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 04 Nov 2020 9:45:15 PM

ஜோ பைடன் மோசடி செய்துள்ளார்... டிரம்ப் குற்றச்சாட்டு

ஜோபைடன் மீது குற்றச்சாட்டு... அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தனக்கு எதிராக போட்டியிட்டுள்ள ஜோ பைடன் மோசடி செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ட்ரம்ப், "நாங்கள் தான் வெற்றி பெறுவோம். வெளிப்படையாக வெற்றி பெறுவோம்.நாட்டின் நன்மை தான் முக்கியம். ஜோ பைடன் தேர்தலில் மோசடி செய்துள்ளார்.

சட்டத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களில் வெற்றி எங்களுக்குத்தான்.

victory,jobidan,trump,court,indictment ,வெற்றி, ஜோபைடன், டிரம்ப், நீதிமன்றம், குற்றச்சாட்டு

ஆனால் முடிவுகளை அறிவிக்காமல் தாமதம் செய்கின்றனர். தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது. வெற்றியை திருட நினைக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு வாக்களிக்க முடியாது. வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பை விட ஜோ பைடன் பல மாநிலங்கலில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார். அதேநேரம் வெற்றி அறிவிப்பதிலும் இழுபறி நிலவி வருகிறது.

ஓக்லஹாமா, கெண்டகி, இண்டியானா, அர்கஜ்சாஸ், புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க், மேரிலேண்ட், மாசாசுசெட்ஸ், வெர்மாண்ட், நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையவில்லை. ட்ரம்ப், ஜோ பைடன் இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

Tags :
|
|