Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவை பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்கத் தயார் - ஜோ பைடன் உறுதி

அமெரிக்காவை பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்கத் தயார் - ஜோ பைடன் உறுதி

By: Karunakaran Thu, 05 Nov 2020 1:29:41 PM

அமெரிக்காவை பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்கத் தயார் - ஜோ பைடன் உறுதி

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐநா சபையின் முயற்சியால் பாரிஸ் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் முதலில் கையெழுத்திட்ட அமெரிக்கா பின்னர் விலகியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. சமூக அக்கறை இல்லாமல் டிரம்ப் அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக பேசி வந்தார்.

தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக அமெரிக்காவை பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்கத் தயாராக இருப்பதாகவும் உலக அளவில் காற்று மாசுவை குறைக்க தான் முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் ஜோ பைடன் உறுதி அளித்தார். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஜோ பைடன் வெற்றியை நெருங்கி உள்ளார். அதிபர் பதவியை பெறுவதற்கு 270 தேர்வாளர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

joe biden,us.presidential election,paris agreement ,ஜோ பிடன், யு.எஸ். ஜனாதிபதி தேர்தல், பாரிஸ் ஒப்பந்தம்

தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார். எனவே ஜோ பைடன் அதிபராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில், நேற்று இரவு ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று டிரம்ப் நிர்வாகம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. சரியாக 77 நாட்களில், பைடன் நிர்வாகம் மீண்டும் அதில் சேரும் என கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளுக்காக பைடன் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை முன்மொழிந்தார். பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து ஒரு நாடு விலக வேண்டும் என்றால் அதற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை டிரம்ப் 2017ம் ஆண்டு வெளியிட்டிருந்தார். அமெரிக்காவின் காத்திருப்பு காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

Tags :