Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வந்துள்ளது .. ஜோ பைடன்

அமெரிக்காவில் கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வந்துள்ளது .. ஜோ பைடன்

By: vaithegi Mon, 19 Sept 2022 11:37:05 AM

அமெரிக்காவில்  கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வந்துள்ளது  ..   ஜோ பைடன்

அமெரிக்கா: கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வந்துள்ளது .... உலகின் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத மிக பெரும் தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுக்கையில் அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துள்ளது. கொரோனாவால் சில பிரச்சினை உள்ளது.

joe biden,usa,epidemic , ஜோ பைடன் ,அமெரிக்கா,தொற்றுநோய்

அதை ஒழிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் ஆனால் தொற்றுநோய் முடிந்துவிட்டது. நீங்கள் கவனித்தால், இங்கு யாரும் மாஸ்க் அணியவில்லை. எல்லோரும் நல்ல நிலையில் இருப்பது போன்று தெரிகிறது. அதனால் அது கால நிலை மாறுகிறது என நினைக்கிறேன்.

மேலும் அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று நான் நினைக்கிறேன். கடந்த வாரம், கோவிட் -19 இலிருந்து இறப்புகளின் எண்ணிக்கை மார்ச் 2020 க்குப் பிறகு வெகுவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் கூறினார்.

Tags :
|