Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை சந்திக்கும் ஜோ பைடன்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை சந்திக்கும் ஜோ பைடன்

By: Karunakaran Thu, 03 Sept 2020 6:59:32 PM

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை சந்திக்கும் ஜோ பைடன்

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவரை போலீஸ் கைதுசெய்ய முற்பட்டபோது அவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் இனவெறிக்கெதிரான போராட்டம் நடைபெற்றது.

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அமெரிக்கவில் விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் காருக்கு அருகே அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் 7 முறை சுட்டனர். இதனால் அவர் படுகாயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது.

joe biden,jacob blake,gun shooting,united states ,ஜோ பிடன், ஜேக்கப் பிளேக், துப்பாக்கி சுடுதல், அமெரிக்கா

ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணம் உள்பட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ விஸ்கான்சின் மாகாணத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இந்த பிரச்சாரத்தின்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கினோஷா நகரை சேர்ந்த ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை ஜோ பைடன் சந்திக்க உள்ளதாக ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தெரிவித்துள்ளது. ஜேக்கப் பிளேக்கின் குடும்பத்தினரை ஜோ பைடன் சந்திக்கும் நிகழ்வு அமெரிக்க அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Tags :