Advertisement

முழங்காலிட்டு மன்னிப்பு கேட்ட ஜோ பிடன்... காரணம் என்ன?

By: Monisha Wed, 11 Nov 2020 4:32:40 PM

முழங்காலிட்டு மன்னிப்பு கேட்ட ஜோ பிடன்... காரணம் என்ன?

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனாநயகக் கட்சி வெற்றிப் பெற்று இருக்கிறது. இதனால் அக்கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அடுத்த அதிபர் பதவியில் பொறுப்பு வகிக்க உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோ பிடன் ஒரு கறுப்பின சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் (46) எனும் இளைஞர் இனைவெறித் தாக்குதல் காரணமாக போலீஸ் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் இந்த உயிரிழப்பு உலகம் முழுவதும் இனவெறித் தாக்குதலுக்கு எதிராக கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. கறுப்பினத்தவருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

usa,president,joe biden,sorry,reason ,அமெரிக்கா,அதிபர்,ஜோ பிடன்,மன்னிப்பு,காரணம்

அந்தச் சம்பவத்தை நினைவுகூறும் வகையில் தற்போதைய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஜோ பிடன் சாலையில் நடந்து சென்ற ஒரு கறுப்பின சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். ஜார்ஜ் பிளாய்ட் கொலை சம்பவம் நடைபெற்றபோதே ஜோ பிடன் என்னுடைய ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமே இல்லை எனத் தெரிவித்து இருந்தார்.

அதையொட்டி ஒரு கறுப்பினச் சிறுமியிடம் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்டதோடு “மனிதநேயத்திற்கு திரும்ப வேண்டும்” என ஒரு அறிக்கையையும் வெளியிட்டு உள்ளார். இதனால் ஜோ பிடனுக்கு ஆதரவுகள் மேலும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|