Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் 100 நாட்கள் முகக்கவசம் அணிய ஜோ பைடன் வலியுறுத்தல்

மக்கள் 100 நாட்கள் முகக்கவசம் அணிய ஜோ பைடன் வலியுறுத்தல்

By: Nagaraj Sat, 05 Dec 2020 09:19:36 AM

மக்கள் 100 நாட்கள் முகக்கவசம் அணிய ஜோ பைடன் வலியுறுத்தல்

முகக்கவசம் அணிய உறுதியேற்க வேண்டும்... கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கர்கள் மொத்தம் 100 நாட்கள் முகக்கவசம் அணிவதற்கு உறுதியேற்று கொள்ள வேண்டும் என்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார்.

அதிபர் என்ற முறையில், இது அவரின் முதல் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்தவகையில், இவர் தற்போதைய அதிபர் டொனால்ட் டரம்ப்பிடமிருந்து பெரிதும் வேறுபடுகிறார்.

ஏனெனில், கொரோனா முகக்கவசம் அணிவதை, நோய் தொற்றுப் பிரச்சினையை அரசியலாக்கு நடவடிக்கை என்று டிரம்ப் விமர்சனம் செய்து வருகிறார். இதனால், அவர் முகக் கவசம் அணிவதில்லை.

mask,wear,americans,emphasis,joe biden ,முகக்கவசம், அணிவது, அமெரிக்கர்கள், வலியுறுத்தல், ஜோ பைடன்

டிரம்ப்பின் இந்தப் போக்கால், முகக் கவசம் அணிவதை பல அமெரிக்கர்கள் தவிர்த்து வருகின்றனர். கொரோனா தொற்றை தடுப்பதில், முகக் கவசம் அணிவது ஒரு எளிமையான வழிமுறை என்று சுகாதார நிபுணர்கள் கூறியிருந்தும் இந்த நிலை. அமெரிக்கர்களில் சுமார் 2,75,000 பேர், இதுவரை கொரோனாவால் இறந்துள்ளனர்.

அதேசமயம், முகக் கவசம் அணிவதை எப்போதும் வலியுறுத்தி வருபவராக இருக்கிறார் புதிய அதிபர் ஜோ பைடன்.

Tags :
|
|