Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது

ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது

By: Karunakaran Tue, 22 Dec 2020 08:16:47 AM

ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது

உலகளவில் அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு அமெரிக்கா முதல் இடம் பிடித்து உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது.

joe biden,first dose,pfizer,corona prevention ,ஜோ பிடன், முதல் டோஸ், ஃபைசர், கொரோனா தடுப்பு

அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு ஏற்கனவே அரசு அனுமதியளித்த நிலையில், தற்போது தடுப்பூசி அமெரிக்கா முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.

உலகளவில் அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதி ஒதுக்கப்பட்துள்ளது. மேலும் அங்கு கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வரவுள்ளது.

Tags :
|