Advertisement

ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஜோ பிடன் வெற்றி

By: Nagaraj Mon, 25 May 2020 11:05:47 AM

ஜனநாயக கட்சியின் முன்னோட்ட தேர்தலில் ஜோ பிடன் வெற்றி

முன்னோட்ட தேர்தலில் ஜோ பிடன் வெற்றி... அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்துக்கு நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் முன்னோட்ட தேர்தலில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் வெற்றி பெற்றார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகளின் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முன்னோட்ட தேர்தல் நடந்து வந்தது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அவருக்கு எதிராக, அக்கட்சியில் வேறு யாரும் வேட்பாளர் தேர்வுக்கு போட்டியிடவில்லை.

preview election,joe biden,candidate,winner,president election ,முன்னோட்ட தேர்தல், ஜோ பிடன், வேட்பாளர், வெற்றி, அதிபர் தேர்தல்


அதனால், ஹவாய் மாகாணம் உட்பட பல மாகாணங்களுக்கான, குடியரசு கட்சியின் பிரைமரி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் செனட் எம்.பி.,யான பெர்னி சான்டர்ஸ் இடையே போட்டி இருந்தது. ஏற்கனவே, சான்டர்ஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு அமலால், ஹவாய் மாகாணத்துக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 'ஆன்லைன்' மூலம், கட்சிப் பிரமுகர்கள் ஓட்டளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், 63 : 37 என்ற விகிதத்தில், ஜோ பிடன் வென்றார். இதன் மூலம் அவருக்கு இதுவரை 1,566 பிரமுகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. மொத்தம், 1,991 பிரமுகர்கள் ஆதரவு உள்ளவரே, கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படுவர்.

அடுத்த மாதத்தில் நடக்கும் மற்ற மாகாண முன்னோட்ட தேர்தல்களில், இந்த இலக்கை பிடன் எட்டுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு நடக்கும் கட்சி மாநாட்டில், ஜோ பிடன் முறைப்படி வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

Tags :
|