Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்காசின் மாநிலத்தில் ஜோ பிடன் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்காசின் மாநிலத்தில் ஜோ பிடன் வெற்றி

By: Karunakaran Thu, 05 Nov 2020 08:41:22 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்காசின் மாநிலத்தில் ஜோ பிடன் வெற்றி

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவில் வருகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 238 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 218 வாக்குகள் பெற்றுள்ளார். தொடர்ந்து ஜோ பிடன் முன்னிலை பெற்று வந்தாலும், குறைந்த வாக்கு வித்தியாசத்திலே டொனால்டு டிரம்ப் பின் தங்கியுள்ளார். இதனால் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

joe biden,us presidential election,wisconsin,trump ,ஜோ பிடன், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், விஸ்கான்சின், டிரம்ப்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் விஸ்காசின் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் நியூயார்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர் மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றன. இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :