Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானம் கோவை படைப்பிரிவில் சேர்ப்பு

தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானம் கோவை படைப்பிரிவில் சேர்ப்பு

By: Nagaraj Wed, 27 May 2020 9:01:16 PM

தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானம் கோவை படைப்பிரிவில் சேர்ப்பு

தேஜஸ் மார்க் 1 விமானம் படைப்பிரிவில் சேர்ப்பு... மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானம், கோவை, சூலூர் விமானப்படை தளத்தில், 18 வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில், சேர்க்கப்பட்டது.

இதனை விமானப்படை தளபதி பதூரியா ஒப்படைத்தார்.கோவை, சூலூரில் விமானபடைத ளம் உள்ளது. இங்கு தேஜஸ் போர் விமானங்கள் 16 கொண்ட படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேஜஸ் போர் விமானத்தில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் -1 போர் விமானத்தை எச் ஏஎல், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

air force,tejas 1,key,delivery,coimbatore ,விமானப்படை, தேஜஸ் 1, சாவி, ஒப்படைப்பு, கோவை


இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 4ம் தலைமுறை போர் விமானம் ஆகும். சுமார் 7 டன் எடை கொண்ட இந்த போர் விமானம், ஒலியின் வேகத்திற்கு இணையாக அதிவேகத்தில் செல்லக்கூடியது. இந்நிலையில் சூலூர் விமானப்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க்1 போர் விமானத்தை, 18 வது ஸ்குவாட்ரான் படைப்பிரிவிடம் விமானப்படை தளபதி பதூரியா ஒப்படைத்தார்.

இதற்கான சாவியை, தென்னிந்திய தலைமை தளபதி அமித் திவாரியிடம் ஒப்படைத்தார். முன்னதாக, இந்த விமானத்தை பதூரியா இயக்கி பார்த்தார். இதன் பின்னர் பதூரியா பேசும் போது, அடுத்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில், இந்திய விமானப்படை முதலிடத்தில் இருக்கும் எனக்கூறினார்.

Tags :
|