Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாரதீய ஜனதா கட்சி சார்பில் 2 நாட்கள் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து - ஜே.பி.நட்டா அறிவிப்பு

பாரதீய ஜனதா கட்சி சார்பில் 2 நாட்கள் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து - ஜே.பி.நட்டா அறிவிப்பு

By: Karunakaran Fri, 19 June 2020 10:00:46 AM

பாரதீய ஜனதா கட்சி சார்பில் 2 நாட்கள் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து - ஜே.பி.நட்டா அறிவிப்பு

லடாக்கில் சீன-இந்திய எல்லை பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதல் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த மோதல் காரணமாக இந்திய-சீன எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததற்கு அஞ்சலி செலுத்தும்வகையில், பாரதீய ஜனதா கட்சி சார்பில் 2 நாட்கள் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

bjp,jp nadda,indo-china border,boundry of ladakh ,பாஜக,ஜே.பி.நட்டா,சீன-இந்திய எல்லை,லடாக் எல்லை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாய்நாட்டை காப்பாற்றுவதற்காக கல்லான் பள்ளத்தாக்கில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை எப்போதும் நினைவில் கொள்வோம். அவர்களது தியாகத்திற்கு நாடே கடமைப்பட்டு உள்ளது. அவர்களுக்கு நானும் அஞ்சலி செலுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அவர்களது தியாகத்தை நினைவுகூரும் வகையில் பாரதீய ஜனதா கட்சியின் காணொலி காட்சி மூலம் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் 2 நாட்கள் ஒத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்து தெரிவித்துள்ளார். இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|