Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை ஜே.பி.நட்டா தொடக்கி வைத்தார்

பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை ஜே.பி.நட்டா தொடக்கி வைத்தார்

By: Nagaraj Wed, 01 Mar 2023 11:34:37 PM

பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை ஜே.பி.நட்டா தொடக்கி வைத்தார்

கர்நாடகா: சங்கல்ப யாத்திரை தொடக்கம்... கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை பாஜக தலைவர் ஜேபி நட்டா இன்று தொடங்கி வைத்தார்.

தற்போதைய கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் தேர்தல் நடத்தி புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். எனவே, கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம்.

விஜய சங்கல்ப யாத்திரைகள்: இந்நிலையில், இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக 4 யாத்திரைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரையில் தலைவர்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அதன்படி, முதல் யாத்திரையை கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா இன்று தொடங்கினார். காமராஜ் நகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

bjp,jp natta,yatra, ,கர்நாடகா, ஜேபி நட்டா, பாதுகாப்பு அமைச்சர்

யாத்திரைக்கு ஏற்ப பேருந்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் பேருந்து தயார் செய்யப்பட்டது. பஸ்சில், முதல்வர் பசவராஜ் பொம்மை, மூத்த தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் அமர்ந்து, பா.ஜ.க, கொடியை அசைத்து, யாத்திரையை நட்டா தொடங்கி வைத்தார்.

யாத்திரை தொடக்கத்தில் பேசிய ஜே.பி.நட்டா, “மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெலகவியில் நாளை இரண்டாவது விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்குகிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து மேலும் இரண்டு யாத்திரைகளை தொடங்குகிறார்.

4 வெவ்வேறு இடங்களில் இருந்து புறப்படும் இந்த யாத்திரைகள் மாநிலத்தின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் செல்லும். பல்வேறு இடங்கள் மற்றும் மாநிலத்தின் 224 தொகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த யாத்திரைகள் 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற உள்ளன. இந்த யாத்திரைகளின் போது, 75 பொதுக் கூட்டங்கள் மற்றும் 150 சாலை பிரச்சாரங்கள் நடத்தப்படும்,” என்றார்.

Tags :
|
|