குழந்தை கடத்தல் வழக்கில் கைதாகி பெண் இறந்த சம்பவத்தில் நீதிபதி விசாரணை
By: Nagaraj Thu, 12 Oct 2023 5:59:53 PM
திருச்செந்தூர்: நீதிபதி விசாரணை... திருச்செந்தூர் கோயிலில் ஒன்றரை வயது குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்டு கோவை காவல்நிலையத்தில் விசாரணையின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் 2-வது நாளாக நீதிபதி விசாரணை நடத்தினார்.
ஆலாந்துறை காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய நீதிபதி சந்தோஷ், அங்கிருந்த கணினியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றார்.
தொடர்ந்து பூலவபட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் வினோத் மற்றும் வழக்கில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்டோரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட பாண்டியன், திலகவதி தம்பதியரின் செல்போன்களில் நரபலி, வசியம் செய்யும் வீடியோக்கள் அதிகளவு பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Tags :
arrest |
judge |
trial |
police |