Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு

முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு

By: Nagaraj Sat, 29 July 2023 8:22:53 PM

முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு

பெங்களூரு: வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் விளக்கம் அளிக்குமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா முதல்வராக உள்ளார். மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் சித்தராமையா எம்எல்ஏவாக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி மைசூரை சேர்ந்த சங்கர் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது வாக்காளர்களுக்கு இலவசங்களை தருவதாக வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்றார் சித்தராமையா. இது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். அதாவது இலவச திட்டங்கள் மூலம் வாக்காளர்களை விலைக்கு வாங்கியுள்ளார். இது சட்டப்படி குற்றம். எனவே அவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

court,karnataka,notice,siddaramaiah ,ஐகோர்ட், கர்நாடகா, சித்தராமையா, நோட்டீஸ்

இந்த வழக்கு நீதிபதி சுனித் தத் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அப்போதைய முதல்வர் சித்தராமையாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் பல்வேறு ஆட்சேபனைகள் இருப்பதாக கூறிய நீதிபதி, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் விளக்கம் அளிக்குமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags :
|
|