Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை விசாரித்த நீதிபதிகள்; ஒரே நாளில் 60 வழங்குகளுக்கு உத்தரவு

உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை விசாரித்த நீதிபதிகள்; ஒரே நாளில் 60 வழங்குகளுக்கு உத்தரவு

By: Nagaraj Thu, 14 May 2020 11:07:47 AM

உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை விசாரித்த நீதிபதிகள்; ஒரே நாளில் 60 வழங்குகளுக்கு உத்தரவு

உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள், கிருஷ்ணா முராரி, ரவிந்திர பட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் நேற்று (மே 13) தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். மூன்று நீதிபதிகளும் ஒரே நாளில், தலா, 20 வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்ததாக, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் முதல்முறையாக, மூன்று நீதிபதிகள், தலா 20 வழக்குகளை விசாரித்து, சாதனை படைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தில், 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது, 32 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் அமர்வு, மற்றும் கூடுதல் நீதிபதிகள் இடம் பெறும் அரசியல் சாசன அமர்வுகள் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.


supreme court,individual session,inquiry,overnight,report ,உச்ச நீதிமன்றம், தனி நபர் அமர்வு, விசாரணை, ஒரேநாள், அறிக்கை

வழக்குகள் தேங்குவதை குறைக்க, ஜாமீன்களுக்கு எதிரான மனுக்கள், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும், குற்ற வழக்குகளில், முன் ஜாமீன் மனுக்களை ஒற்றை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

கொரோனா பரவலால், உச்ச நீதிமன்றத்தில், முக்கியமான வழக்குகளை மட்டும், இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக விசாரித்து, உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. கடந்த, 11ம் தேதி, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், 'வரும், 13ம் தேதி முதல், வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரும் மனுக்கள், ஜாமீன்களுக்கு எதிரான அப்பீல்கள், முன் ஜாமீன் மனுக்கள் ஆகியவற்றை, ஒற்றை அல்லது இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்' என, தெரிவித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள், கிருஷ்ணா முராரி, ரவிந்திர பட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் நேற்று (மே 13) தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். மூன்று நீதிபதிகளும் ஒரே நாளில், தலா, 20 வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்ததாக, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :