Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு

வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு

By: Nagaraj Mon, 31 July 2023 8:12:52 PM

வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு

கரூர்: கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்த 15 திமுகவினர் வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டில் கடந்த மே மாதம் 26ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, திமுகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களின் கார் கண்ணாடி உடைத்து தாக்கிய வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து கரூர் கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

dmk members,15 people,officers,lawyer,verdict tomorrow ,திமுகவினர், 15 பேர், அதிகாரிகள், வழக்கறிஞர், நாளை தீர்ப்பு

இதையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர். மதுரை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்தது, கரூர் கிழமை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்து சம்பந்தப்பட்ட 15 பேரும் 3 நாட்களுக்குள் கரூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை கரூரில் நீதிமன்றம் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிராஜ், நெடுஞ்செழியன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரவேல் ஆகியோர் வாதாடினர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக சென்னையில் இருந்து வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ் வாதாடினர். இரு தரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி ராஜலிங்கம், நாளை தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் சரண் அடைந்த 15 நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags :
|