Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேனி எம்.பி., மீதான தேர்தல் வழக்கில் வரும் 16ம் தேதி தீர்ப்பு

தேனி எம்.பி., மீதான தேர்தல் வழக்கில் வரும் 16ம் தேதி தீர்ப்பு

By: Nagaraj Wed, 07 Oct 2020 09:41:25 AM

தேனி எம்.பி., மீதான தேர்தல் வழக்கில் வரும் 16ம் தேதி தீர்ப்பு

வரும் 16ம் தேதி தீர்ப்பு... தேனி எம்.பி.யான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு வரும் 16-ம் தேதி பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் கூறியிருந்ததாவது:

தேனி எம்.பி.யும், தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார், தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிகஅளவில் பணப் பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வெற்றி பெற்றுள்ளார். பணப் பட்டுவாடா காரணமாக வேலூர்தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆனால், தேனி தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படவில்லை.

bilateral,arguments,election,judge,judgment ,இருதரப்பு, வாதங்கள், தேர்தல், நீதிபதி, தீர்ப்பு

பல முறைகேடுகள் செய்துரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளதால், அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரியும், வழக்கில் உள்ள சில கோரிக்கைகளை நீக்கக் கோரியும் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இந்த வழக்கு மீதான விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|