Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்

மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்

By: Karunakaran Tue, 28 July 2020 11:47:38 AM

மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்கியதில் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில், முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. ஆபரேஷன் தாமரையை ஒப்புக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

கொடுத்த வாக்குறுதிப்படி மந்திரி பதவியை வழங்கினோம் என்று சொல்லுங்கள். ஆனால் சாதனை செய்துள்ளோம் என்று மட்டும் சொல்லாதீர்கள். கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் இந்த முறைகேடு குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

dk sivakumar,judicial inquiry,medical equipment,misconduct ,டி.கே.சிவகுமார், நீதி விசாரணை, மருத்துவ உபகரணங்கள், முறைகேடு

பிரதமர் மோடி 21 நாட்களில் கொரோனா போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார். மக்களை கைகளை தட்டுமாறும், விளக்கு ஏற்றுமாறும் கூறினார். ஆனால் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோர் சிகிச்சை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கர்நாடக மாநில அரசு கொரோனா பிணங்களின் பெயரில் கொள்ளையடிப்பதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் அவர், கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்கியதில் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்துள்ளது. பல்வேறு தரப்பினருக்கு நிதி உதவி வழங்குவதாக எடியூரப்பா அறிவித்தார். இதுவரை எத்தனை பேருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த அரசு ஆவணங்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :