Advertisement

நெல்லை மாவட்டத்தில் ஜூலை 11 உள்ளூர் விடுமுறை

By: vaithegi Fri, 08 July 2022 7:02:34 PM

நெல்லை மாவட்டத்தில் ஜூலை 11 உள்ளூர் விடுமுறை

நெல்லை : தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரிதும் பிரசித்தி பெற்ற கோவில் என்றால் அது நெல்லை நெல்லையப்பர் கோவில் தான். ஒவ்வொரு ஆண்டும் நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து நேத்திக்கடன்களை செலுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி இந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெற இருக்கிறது.

local holiday,paddy ,உள்ளூர் விடுமுறை,நெல்லை

மேலும், பல ஊர்களில் இருக்கும் பக்தர்கள் வருவதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேரோட்டத்தின் போது மிக கூட்ட நெரிசலாக இருக்கும் என்பதால் திருவிழாவில் கலந்துகொள்ளும் பொது மக்கள் அனைவருமே கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை முடிந்த அளவுக்கு கடைபிடிக்க வேண்டும் எனவும் நெல்லை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

Tags :