Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லையில் நெல்லையப்பர் தேரோட்ட திருவிழாயொட்டி ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லையில் நெல்லையப்பர் தேரோட்ட திருவிழாயொட்டி ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Sun, 26 June 2022 12:03:15 PM

நெல்லையில்  நெல்லையப்பர் தேரோட்ட திருவிழாயொட்டி ஜூலை 11ஆம் தேதி  உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி : தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவிற்கு பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதோடு நேத்திக்கடன்களையும் செய்துவிட்டு செல்கின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்கள் அறிவித்துள்ளார்.

local holiday,tirunelveli , உள்ளூர் விடுமுறை,திருநெல்வேலி

மேலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள ஜூலை 11ஆம் தேதி அரசு பொதுத்தேர்வுகள் எதுவும் இருப்பின் அந்த மாணவர்களுக்கு வழக்கம்போல பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிகள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் வழக்கம் போல தங்களது பணிகளை செய்யலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருநெல்வேலி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags :