Advertisement

வங்கிகளுக்கான ஜூலை மாதம் விடுமுறை பட்டியல் வெளியீடு

By: vaithegi Tue, 21 June 2022 12:58:56 PM

வங்கிகளுக்கான ஜூலை மாதம் விடுமுறை பட்டியல் வெளியீடு

இந்தியா : நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைவருக்குமான மிக அத்தியாவசியமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகவே உள்ளன. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பணம் அனுப்புவது, கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வங்கிகள் அவசியமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் அரசு திட்டங்களின் பலன்களை பெறுவது, சம்பளம் எடுப்பது, பென்சன் பெறுவது என ஒவ்வொரு நபருக்கும் பணம் சார்ந்த மிக முக்கிய சேவைகளை வழங்குவதில், வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எனவே, ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

ஒவ்வொரு மாதமும் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இதுபோக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மேலும், பொது விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்படும்.

இவ்வகையில், வரும் ஜூலை மாதம் வங்கி 6 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதமும் விடுமுறை நாட்கள் குறைவாக இருந்த நிலையில், ஜூலை மாதமும் குறைவான விடுமுறை நாட்கள் இருப்பதால் வங்கி ஊழியர்கள் வேதனையில் உள்ளனர்.

government,holidays,banks ,அரசு ,விடுமுறை ,வங்கிகள்

ஒரு சில மாநிலங்களில் மாநில அளவில் நடத்தப்படும் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவில் வங்கிகளுக்கு விடுமுறையாக அளிக்கப்படும். ஆனால் அது மாதிரி எந்த விடுமுறையும் தமிழகம் உள்பட எந்த மாநிலத்திலும் வரும் ஜூலை மாதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஜூலை 3 – ஞாயிறு விடுமுறை
ஜூலை 9 – இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை
ஜூலை 10 – ஞாயிறு / பக்ரீத் பண்டிகை
ஜூலை 17 – ஞாயிறு விடுமுறை
ஜூலை 23 – நான்காம் சனிக்கிழமை விடுமுறை
ஜூலை 24 – ஞாயிறு விடுமுறை
ஜூலை 31 – ஞாயிறு விடுமுறை

Tags :