Advertisement

தடுப்பை தாண்டிக்குதித்தார்... பாங்கரா ஆடி மகிழ்ந்தார்

By: Nagaraj Mon, 24 Oct 2022 6:38:17 PM

தடுப்பை தாண்டிக்குதித்தார்... பாங்கரா ஆடி மகிழ்ந்தார்

லண்டன்: நீண்ட இடைவெளிக்கு பின்னர் நண்பரை பார்த்த மகிழ்ச்சியில் லண்டன் விமான நிலையத்தில் தடுப்பை தாண்டி சென்று வரவேற்று உற்சாக நடனம் ஆடியவரின் வீடியோ வைரலாகியுள்ளது.

ஹூத்ரோ விமான நிலையத்தில் இது தொடர்பான வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், விமானத்தில் நபர் ஒருவர் வந்து இறங்கினார். இதையடுத்து விமான நிலையத்தில் அவருக்காக நண்பர் காத்திருந்தார்.

video view,caption,share,twitter,bangla ,வீடியோ காட்சி, கேப்ஷன், பகிர்தல், ட்விட்டர், பாங்கரா

இறங்கியவரை நீண்ட காலத்திற்கு பின் பார்த்ததில் உற்சாகமடைந்த சிங் நண்பர், தடுப்பை தாண்டி சென்று ஓடி போய் அவரை கட்டி பிடித்து கொண்டாடி மகிழ்ந்தார்.

பின்னர் இருவரும் அவர்களின் பாரம்பரிய நடனமான பாங்கரா நடனம் ஆடினர். Heathrow விமான நிலையத்தில் இது மிகவும் புகழ்பெற்ற வரவேற்புகளில் ஒன்றாக இருக்கும் என்ற கேப்ஷனுடன் ட்விட்டரில் இது தொடர்பான வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது.

Tags :
|