Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜூன் மாதத்தில் தான் வரலாற்றிலேயே அதிக மழை பெய்துள்ளது .. வானிலை ஆய்வாளர்

ஜூன் மாதத்தில் தான் வரலாற்றிலேயே அதிக மழை பெய்துள்ளது .. வானிலை ஆய்வாளர்

By: vaithegi Mon, 19 June 2023 09:17:20 AM

ஜூன் மாதத்தில் தான் வரலாற்றிலேயே அதிக மழை பெய்துள்ளது   ..   வானிலை ஆய்வாளர்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், அதிலும் குறிப்பாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

எனவே இதற்கேற்ப சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

meteorologist,june,rain , வானிலை ஆய்வாளர்,ஜூன் ,மழை

அதிலும் குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியிருக்கிறது. அதன்படி அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும், கொரடூரில் 8 செ.மீ, பூந்தமல்லியில் 7 செ.மீ மழையும், தாம்பரத்தில் 14 மி.மீ மழையும், கேளம்பாக்கத்தில் 17 மி.மீ, மாமல்லபுரம் 8மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஜூன் மாதத்தின் சராசரி மழையே 55மிமீ உள்ள நிலையில் ஒரே நாளில் மாத சராசரியை விட 3மடங்கு மழை பெய்து உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்து உள்ளார்.

அத்துடன் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மழை காரணமாக ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடைசியாக சென்னையில் 1996ம் ஆண்டிற்கு பிறகு ஜூன் மாதத்தில் மழை காரணமாக தற்போது தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கு முன்னதாக 1991 மற்றும் 1996ம் ஆண்டுகளுக்கு பிறகு 2023ல் ஜூன் மாதத்தில் தான் வரலாற்றிலேயே அதிக மழை பெய்து உள்ளதாக அவர் கூறினார்.

Tags :
|