Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 800 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஒரே நேர்க்கோட்டில் தோன்றிய வியாழன் மற்றும் சனி கோள்கள்

800 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஒரே நேர்க்கோட்டில் தோன்றிய வியாழன் மற்றும் சனி கோள்கள்

By: Karunakaran Tue, 22 Dec 2020 11:21:31 AM

800 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஒரே நேர்க்கோட்டில் தோன்றிய வியாழன் மற்றும் சனி கோள்கள்

800 ஆண்டுகளுக்கு பின் அரிய நிகழ்வாக சூரியனை சுற்றிவரும் வியாழன் மற்றும் சனி கோள்கள் வானில் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதுபோன்ற அடுத்த வானியல் நிகழ்வு இனி 2418-ம் ஆண்டுதான் நடைபெறும்.

இதனால் இந்த நிகழ்வை காண இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்களும் மிகுந்த ஆர்வமடைந்தனர். தமிழகத்தில் இந்த நிகழ்வை பொதுமக்கள் நேரில் காண கோளரங்கங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்று மக்கள் இந்த வானியல் நிகழ்வை கண்டுகளித்தனர்.

jupiter,saturn,straight line,800 years ,வியாழன், சனி, நேர் கோடு, 800 ஆண்டுகள்

இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் இந்த வானியல் நிகழ்வு மக்கள் வெறும் கண்ணால் நேரடியாக பார்க்கும் வகையில் தெரிந்தது. அந்த வகையில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலும் இந்த வானியல் நிகழ்வு தெளிவாக தெரிந்தது. இந்த நிகழ்வை சிலர் தங்கள் செல்போனிலும் புகைப்படமாக எடுத்தனர்.

வானில் தோன்றும் சில அரிய நிகழ்வுகள் செல்போன் கேமராவில் புலப்படாது, ஆனால் இந்த நிகழ்வு செல்போன் கேமராவால் தெளிவாக போட்டோ எடுக்க முடிந்தது. இதனால் மக்கள் தங்களுடைய செல்போனில் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags :
|