Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரிஷாட் மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகல்

ரிஷாட் மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகல்

By: Nagaraj Mon, 27 July 2020 9:07:23 PM

ரிஷாட் மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகல்

நீதியரசர் விலகல்... முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகியுள்ளார்.

தனிப்பட்ட வழக்குகளை மேற்கோள்காட்டி இந்த வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜெயவர்தன விலகியுள்ளார். குறித்த மனு தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் நீதிமன்ற அமர்வில் உயர் நீதிமன்ற தலைவர் யசந்த கோத்தாகொட மற்றும் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் உள்ளனர்.

மேலும் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த இந்த மனு ஆகஸ்ட் 7 ஆம் திகதி மேலதிக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

rishad bathiudeen,judge,disqualification,presence,call ,ரிஷாட் பதியுதீன், நீதியரசர், விலகல், முன்னிலை, அழைப்பு

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார். வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள கிளையில் அவர் முன்னிலையானார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|