Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் - இஸ்ரோ தலைவர்

கொரோனாவால் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் - இஸ்ரோ தலைவர்

By: Karunakaran Tue, 08 Dec 2020 12:03:37 PM

கொரோனாவால் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் - இஸ்ரோ தலைவர்

இஸ்ரோ நிறுவனம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்வெளி திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2022-ம் ஆண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த திட்ட அமலாக்கம் ஒரு ஆண்டுக்கு தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் பேட்டி அளிக்கையில், மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்துகிறது. இதை வருகிற 2022-ம் ஆண்டு அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்பு இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு (2021) ஜூலை ஆகிய மாதங்களில் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்துவதில் காலதாமதம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

kaganyan plan,corona impact,isro chief,sivan ,ககன்யன் திட்டம், கொரோனா தாக்கம், இஸ்ரோ தலைவர், சிவன்

மேலும் அவர், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த ஒரு ஆண்டு தள்ளிப்போகலாம். சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லேண்டர், ரோவரை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்த நாங்கள் இன்னும் தேதியை முடிவு செய்யவில்லை. வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ரயான் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், ககன்யான் திட்டத்திற்கு முன்பாக ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டத்தில் 20 வகையான விண்வெளி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வு பணி 4 ஆண்டுகளுக்கு மேல் நடைபெறும். இந்த சுக்ரயான் திட்டத்தை வருகிற 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வெள்ளி கிரகம், 19 மாதங்களுக்கு ஒரு முறை தான் பூமிக்கு அருகில் வரும். இந்த திட்டத்திற்கு இந்திய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஆய்வு கருவிகளை உள்ளடக்கிய திட்டங்களை நாங்கள் பெற்றுள்ளோம் என்று கூறினர்.


Tags :