Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

By: Nagaraj Sun, 17 July 2022 10:19:05 PM

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி: சிபிசிஐடிக்கு மாற்றம்... கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் பள்ளி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி இன்று (ஜூலை 17) மாணவர்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறி, போலீசார் மீது கல்வீசி தாக்கினர்.


மேலும் போலீஸ் வாகனத்தையும் தாக்கி தீ வைத்து கொளுத்தினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளி கட்டடத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்நிலையில் கள்ளக்குறிச்சிக்கு உள்துறை செயலர் மற்றும் டி.ஐ.ஜி., உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:

investigation,3 arrests,student death,violence,works ,ஆய்வு, 3 பேர் கைது, மாணவி மரணம், வன்முறை, பணிகள்

சின்ன சேலத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி,முதல்வர் சிவசங்கரன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என கூறினார்.


வதந்திகளை நம்பி பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம்.மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.மாணவி மரணம் தொடர்பாக அரசு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தும். என உள்துறை செயலர் பனீந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.


பள்ளி மாணவி மரணம் அடைந்த விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து நாளை கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் வேலு. பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

Tags :