Advertisement

கமல்ஹாசன் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Tue, 14 Nov 2023 12:14:00 PM

கமல்ஹாசன் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து குழந்தைகள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்காக சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று.

இதேபோன்று குழந்தைகள் தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

happy childrens day,kamal haasan , கமல்ஹாசன் ,குழந்தைகள் தின வாழ்த்து

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளாதாவது,

தீங்கில்லாத, மகிழ்வான, கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :