Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமலஹாசன் தேர்வு

மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமலஹாசன் தேர்வு

By: Monisha Sat, 17 Oct 2020 11:29:10 AM

மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமலஹாசன் தேர்வு

2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமலஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வரவிருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முக ஸ்டாலின் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமலஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

assembly election,tamil nadu,candidate,kamal haasan,makkal neethi maiyam party ,சட்டமன்ற தேர்தல்,தமிழ்நாடு,வேட்பாளர்,கமலஹாசன்,மக்கள் நீதி மய்யம் கட்சி

நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற கட்சியின் கூட்டம் ஒன்றில் கமல்ஹாசன் கலந்து கொண்டபோது '2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமலஹாசன் தேர்வு" என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமலஹாசன் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணியுடன் தேர்தலை சந்திக்குமா? என்பதையும் ஒருவேளை கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கமலஹாசனை முதல்வர் வேட்பாளராக கூட்டணி கட்சிகள் ஏற்று கொள்ளுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags :