Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீங்கள் அசட்டையாக இருந்தால் கொள்ளை நடந்து கொண்டே தான் இருக்கும் - கமல்ஹாசன்

நீங்கள் அசட்டையாக இருந்தால் கொள்ளை நடந்து கொண்டே தான் இருக்கும் - கமல்ஹாசன்

By: Monisha Mon, 28 Dec 2020 08:47:23 AM

நீங்கள் அசட்டையாக இருந்தால் கொள்ளை நடந்து கொண்டே தான் இருக்கும் - கமல்ஹாசன்

மதுரையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சென்னையில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதையடுத்து 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று மதியம் சென்னையிலிருந்து கமல்ஹாசன் தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் திருச்சி விமான நிலையத்தில் ஓடுதள பாதையை பலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருப்பதால், அங்கு இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கமல்ஹாசன் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு சென்றார். திருச்சியில் அவரது ஹெலிகாப்டர் விமான நிலையம் அருகில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் தரையிறங்கியது. கமல்ஹாசனுடன் அவரது மகள் அக்சரா ஹாசனும் வந்திருந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் நேற்று தனது 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தனியார் ஓட்டலில் நடந்த சிறு, குறு தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஏற்பாடு செய்து இருந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

kamalhasan,ignore,trichy,propaganda,meeting ,கமல்ஹாசன்,அசட்டை,திருச்சி,பிரசாரம்,கூட்டம்

தமிழகத்தை மாற்றி அமைக்கும் வேலையை நான் மட்டும் செய்து விட முடியாது. அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். நீங்கள் அசட்டையாக இருந்தால் கொள்ளை நடந்து கொண்டே தான் இருக்கும். ஆட்சியாளர்கள் கொள்ளையில் துளிர்த்து போய்விட்டார்கள். எம்.ஜி.ஆர். இப்படி துளிர்க்கவேண்டும் என்பதற்காக இலையை வைக்கவில்லை.

தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடத்த மக்கள் நீதி மய்யம் சிறப்பான திட்டங்களை வைத்து இருக்கிறது. நாங்கள் யாருக்கும் காசு கொடுப்பது இல்லை. ஆனாலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது. மக்கள் விரும்பி வருகிறார்கள். தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் எல்லோரது மனதிலும் தோன்றி விட்டது. இனி அதனை செயல்படுத்த வேண்டியது தான் பாக்கி. தேர்தலை எவ்வளவு தள்ளி போட்டாலும் சரி, முன்னாடி கொண்டு வந்தாலும் சரி நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

தமிழகத்திற்கு தேவை ஒரு நேர்மையான அரசு அதனை எங்களால் தான் அமைக்க முடியும். நாங்கள் அமைக்கும் ஆட்சியில் சி.பி.ஐ. சோதனை நடத்த தேவை இல்லை. மக்களே கணக்கு கேட்கலாம் என்று பேசினார்.

Tags :
|
|