Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகா தேர்தலில் காங்கிரசுக்கு பிரசாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு

கர்நாடகா தேர்தலில் காங்கிரசுக்கு பிரசாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு

By: Nagaraj Sat, 29 Apr 2023 11:30:46 AM

கர்நாடகா தேர்தலில் காங்கிரசுக்கு பிரசாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு

புதுடில்லி: கமலுக்கு அழைப்பு... கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி அமித்ஷா யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட செல்வாக்கு மிக்க தலைவர்கள் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

kamal,call,congress,campaign,karnataka,election ,கமல், அழைப்பு, காங்கிரஸ், பிரசாரம், கர்நாடகா, தேர்தல்

தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளநிலையில் காங்கிரஸ் கட்சியும் நட்சத்திரப் பேச்சாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு மறுப்போ அல்லது சம்மதமோ மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவிக்கப்படவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
|
|