Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை; கமல்ஹாசன் திட்டவட்டம்

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை; கமல்ஹாசன் திட்டவட்டம்

By: Monisha Mon, 02 Nov 2020 6:15:17 PM

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை; கமல்ஹாசன் திட்டவட்டம்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டது என்பதும் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எப்படி என்பது குறித்து ஆலோசனை செய்ய சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூடினர். கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

kamal haasan,people justice center,dmk,admk,election ,கமல்ஹாசன்,மக்கள் நீதி மய்யம்,திமுக,அதிமுக,தேர்தல்

இதனை அடுத்து திமுக மற்றும் அதிமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி இல்லை என்பது உறுதியாகி உள்ளது. திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் வேறு எந்த கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே சமீபத்தில் இக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும், கூட்டணியை முடிவு செய்யும் முழு அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|