Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஜினியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன்!

ரஜினியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன்!

By: Monisha Tue, 01 Dec 2020 11:48:01 AM

ரஜினியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று அரசியல் கட்சி குறித்த தெளிவான ஒரு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், விரைவில் அரசியல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் அவர் விரைவில் அரசியல் குறித்த முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நிலையில், இன்று உலக நாயகன் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

rajinikanth,kamal haasan,journalists,politics,announcement ,ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,செய்தியாளர்கள்,அரசியல்,அறிவிப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் அலுவலகத்தில் இன்று கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றும் வருகை தரும் பத்திரிகையாளர்கள் அனைவரும் கோவிட் விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இன்றய செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் நேற்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய நிலையில், இன்று கமலஹாசனும் செய்தியாளர்களை சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :