Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்ப பெற கமல் வலியுறுத்தல்

விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்ப பெற கமல் வலியுறுத்தல்

By: Nagaraj Mon, 07 Dec 2020 08:32:35 AM

விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்ப பெற கமல் வலியுறுத்தல்

திரும்பப் பெற வேண்டும்... விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். அவர்களின் போராட்டம் 11 வது நாளாக நேற்றும் தொடா்ந்தது.

விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக அவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.

Tags :