Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் டிரம்பை கடுமையாக விமர்சித்த கமலா ஹாரிஸ்

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் டிரம்பை கடுமையாக விமர்சித்த கமலா ஹாரிஸ்

By: Karunakaran Sun, 06 Sept 2020 4:25:17 PM

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் டிரம்பை கடுமையாக விமர்சித்த கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அதிபர் தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் டிரம்ப், அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், 3-ம் கட்ட சோதனைக்கு முன்பே தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு அடிப்படையில் அங்கீகாரம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

kamala harris,vocal critic,trump,corona vaccine ,கமலா ஹாரிஸ், விமர்சனம், டிரம்ப், கொரோனா தடுப்பூசி

தற்போது, தடுப்பூசி விவகாரத்தில் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து டிரம்ப் நிபுணர்களின் கருத்தை கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் மக்களின் நம்பிக்கையை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என அதிபர் டிரம்ப் நம்பியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கமலாஹாரிஸ் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த நிபுணர்களின் கருத்தை அடக்குவதில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதுபோன்று வரும் காலத்தில் தடுப்பூசி விவகாரத்திலும் நிகழக்கூடும். கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்துக்கு முன்பாக கிடைத்தால் அந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் டிரம்பின் வார்த்தையை நான் நம்ப மாட்டேன். நம்பகமான ஒருவர் அதற்காக உறுதி அளித்தால் மட்டுமே நம்புவேன். ஆனால் டிரம்பை நம்ப மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Tags :
|