Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கமலா ஹாரிஸ் ஆதரவு தெரிவித்ததாக தகவல்

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கமலா ஹாரிஸ் ஆதரவு தெரிவித்ததாக தகவல்

By: Karunakaran Fri, 04 Dec 2020 3:05:30 PM

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கமலா ஹாரிஸ் ஆதரவு தெரிவித்ததாக தகவல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கனடா நாட்டு பிரதமர் உள்பட அந்நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து தவறானது.

மேலும் ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்களில் இதுபோன்ற கருத்துக்கள் தேவையற்றது என தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிஸ் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

kamala harris,delhi,farmers,struggle ,கமலா ஹாரிஸ், டெல்லி, விவசாயிகள், போராட்டம்

இத்துடன் கமலா ட்விட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள ட்விட்டர் பதிவை கனடா நாட்டின் மத்திய அமைச்சர் ஜாக் ஹாரிஸ் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டார் என தெரியவந்துள்ளது.

மேலும் விவசாயிகள் போராட்டம் பற்றி கமலா ஹாரிஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றே தெரிகிறது. அந்த வகையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கமலா ஹாரிஸ் ஆதரவு தெரிவித்ததாக வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது. உண்மையில் கனடா நாட்டு மத்திய அமைச்சர் ஜாக் ஹாரிஸ் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

Tags :
|