Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோபிடனை விட கமலா ஹாரிஸ் மோசமானவர்; அதிபர் டிரம்ப் விமர்சனம்

ஜோபிடனை விட கமலா ஹாரிஸ் மோசமானவர்; அதிபர் டிரம்ப் விமர்சனம்

By: Nagaraj Sun, 16 Aug 2020 4:53:05 PM

ஜோபிடனை விட கமலா ஹாரிஸ் மோசமானவர்; அதிபர் டிரம்ப் விமர்சனம்

ஜோபிடனை விட கமலா ஹாரிஸ் மோசமானவர்... ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அவரைவிட ஒரு படி மோசமானவர் துணைஅதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப், இரண்டாவது தடவையாகவும் போட்டியிடுகிறார்.

jobidan,kamala harris,us president trump,election ,ஜோபிடன், கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தல்

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. அவரை விட துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் மோசமானவர்.

ஜோபிடன் அதிபரானால் உடனடியாக போலீஸ் துறையை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு சட்டத்தைக் கொண்டு வந்துவிடுவார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரை விட எனக்கு இந்திய வம்சாவளியினரின் ஆதரவு அதிகம் இருக்கிறது. ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இருவருமே பொலிஸ் துறைக்கு எதிராக செயற்பட கூடியவர்கள். உங்களுடைய மரியாதையை, கௌரவத்தை இருவரும் பறிக்கின்றனர்” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

Tags :