Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேர்தல் பிரசாரத்தில் தன் தாய், தந்தை பற்றி கூறிய கமலா ஹாரிஸ்

தேர்தல் பிரசாரத்தில் தன் தாய், தந்தை பற்றி கூறிய கமலா ஹாரிஸ்

By: Nagaraj Thu, 13 Aug 2020 9:29:06 PM

தேர்தல் பிரசாரத்தில் தன் தாய், தந்தை பற்றி கூறிய கமலா ஹாரிஸ்

தன் தாய், தந்தை பற்றி தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ், தமது முதல் பிரச்சாரத்தில் இந்தியரான தாய் மற்றும் ஜமைக்காவை சேர்ந்த தந்தையை பற்றி குறிப்பிட்டார்.

kamala harris,propaganda,mother,father,usage ,கமலா ஹாரிஸ், பிரசாரம், தாய், தந்தை, பாவனை

டேலாவேர் மாநிலத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர், தமது வாழ்க்கையில் குடும்பம் மிக முக்கியமானது என்றார். வாழ்க்கையில் பல பதவிகளை வகித்துள்ளதாக கூறிய அவர் துணை அதிபர் என்பது அவற்றில் மேலும் சிறப்பானதாக இருக்கும் என்றார்.

ஆனாலும் மோமாலா என்று தாம் தமது அன்னையால் அழைக்கப்பட்டது எல்லாவற்றையும் விட மேலானது என அவர் கூறினார்.

தமது உரையில் அதிபர் டிரம்பை விமர்சித்த கமலா ஹாரிஸ், கொரோனா விவகாரத்தில், நிபுணர்களை விடவும் அதிகம் தெரிந்தவர் என்ற பாவனையில் செயல்பட்டு, அதை கட்டுப்படுத்துவதில் டிரம்ப் தோல்வி அடைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

Tags :
|
|