Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசுக்கு அமெரிக்க துணை அதிபராகும் வாய்ப்புகள் பிரகாசம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசுக்கு அமெரிக்க துணை அதிபராகும் வாய்ப்புகள் பிரகாசம்

By: Nagaraj Mon, 15 June 2020 12:10:26 PM

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசுக்கு அமெரிக்க துணை அதிபராகும் வாய்ப்புகள் பிரகாசம்

துணை அதிபர் ஆவாரா?... அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கும் நிலையில் இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு மாகாண வாரியாக நடந்த ஓட்டெடுப்புகளில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தார்.

chancellor of the presidential election,jobidan,kamala harris,vice president ,அதிபர் தேர்தல், ஜோபிடன், கமலா ஹாரிஸ், துணை அதிபர்

இதன் மூலம் அவர் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. கொரோனா வைரஸ் தாக்கம், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் கருப்பின மக்களின் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ஆகியவை நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜோ பிடன் சூளுரைத்துள்ளார். இதற்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் தன்னுடன் இணைந்து துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் ஜோ பிடன் தீவிரம் காட்டி வருகிறார்.

துணை அதிபர் பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

chancellor of the presidential election,jobidan,kamala harris,vice president ,அதிபர் தேர்தல், ஜோபிடன், கமலா ஹாரிஸ், துணை அதிபர்

அதன்படி தனது உறுதிப்பாடு மற்றும் கட்சியினரின் கோரிக்கையை ஒன்றிணைத்து கருப்பினப் பெண் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வதில் ஜோ பிடன் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ஜனநாயக கட்சியை சேர்ந்த மூத்த பெண் உறுப்பினர்கள் பலரிடம் ஜோ பிடன் 2 கட்டங்களாக நேர்காணல் நடத்தி முடித்துள்ளார்.

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ், மாசசூசெட்ஸ் செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன், முன்னாள் அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய சூசன் ரைஸ் உள்ளிட்ட 6 பேருக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது

இவர்களில் கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக அமெரிக்க அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் கமலா ஹாரிஷ் கடந்த ஆண்டு களமிறங்கினார்.

அப்போது அவர் ஜோ பிடனுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கமலா ஹாரிஸ் திடீரென போட்டியில் இருந்து விலகி ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :