Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம்; கமல்ஹாசன்

தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம்; கமல்ஹாசன்

By: Monisha Fri, 06 Nov 2020 3:46:51 PM

தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம்; கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது தெம்பாக இருந்தது. தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக நாங்கள் உருவெடுத்திருக்கிறோம். கூட்டணி குறித்து பேட வேண்டிய காலம் இது இல்லை. நல்லவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் வரும் பட்சத்தில் அவர்களுடன் நிச்சயமாக நாங்கள் கூட்டணி வைப்போம். அப்போது மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணியாக இருக்காது. முதல் அணியாக இருக்கும்.

kamal haasan,makkal neethi maiyam,party,politics,election ,கமல்ஹாசன்,மக்கள் நீதி மய்யம்,கட்சி,அரசியல்,தேர்தல்

எங்கள் அரசு வழிகாட்டும் அரசு; பழிவாங்கும் அரசாக இருக்கும். மக்கள் நீதி மய்ய அரசியல் வியூகம் நேர்மைதான். 1,00,000 நபர்கள் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள். எங்கள் அரசியல் பழிகூடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல.

மனுஸ்மிருதி குறித்து போராட்டம் நடத்துவது தேவையில்லாதது; மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம்; நான் நாத்திக வாதி அல்ல; நான் பகுத்தறிவாளன். வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது. வேலை வாங்கி கொடுப்பதே எனது வேலை. தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம் என கூறினார்.

Tags :
|