Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தவ் தாக்கரே கொரோனாவுடன் போராடுவதற்கு பதிலாக கங்கனா, எதிர்க்கட்சிகளுடன் போராடி வருகிறார் - தேவேந்திர பட்னாவிஸ்

உத்தவ் தாக்கரே கொரோனாவுடன் போராடுவதற்கு பதிலாக கங்கனா, எதிர்க்கட்சிகளுடன் போராடி வருகிறார் - தேவேந்திர பட்னாவிஸ்

By: Karunakaran Mon, 14 Sept 2020 4:33:10 PM

உத்தவ் தாக்கரே கொரோனாவுடன் போராடுவதற்கு பதிலாக கங்கனா, எதிர்க்கட்சிகளுடன் போராடி வருகிறார் - தேவேந்திர பட்னாவிஸ்

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவுக்கு மத்தியில் மகாராஷ்டிரா அரசியலில் தற்போது பல பிரச்னை நிலவி வருகிறது.

மும்பையை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரையும் நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டினார். இதனால் கங்கனா ரணாவத்திற்கும், மகாராஷ்டிரா ஆளும் கட்சியான சிவசேனாவுக்கும் வார்த்தை மோதல் வெடித்தது. இதனால் கங்கனா ரணாவத்திற்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதனால் ஆளும் கட்சி பாஜகவை சாடியுள்ளது.

kangana ranaut,opposition party,uddhav thackeray,devendra patnawis ,கங்கனா, எதிர்க்கட்சி, உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ்

இந்நிலையில், முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா வைரசுடன் போராடுவதற்கு பதில் கங்கனா மற்றும் எதிர்க்கட்சிகளுடன் போராடி வருகிறார் என பாஜக தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி அளிக்கையில், தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை10 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையில் 40 சதவீதம் மகாராஷ்டிராவில் உள்ளது. முதலில் நமது முதல் மந்திரி கொரோனா வைரசை எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் அவர் எதிர்க்கட்சிகள் மற்றும் கங்கனாவை எதிர்த்து போராடுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

Tags :