Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனி இங்கே வாம்மா... தந்தை நினைவிடத்தில் பாசமுடன் அழைத்த முதல்வர்

கனி இங்கே வாம்மா... தந்தை நினைவிடத்தில் பாசமுடன் அழைத்த முதல்வர்

By: Nagaraj Sun, 07 Aug 2022 7:46:32 PM

கனி இங்கே வாம்மா... தந்தை நினைவிடத்தில் பாசமுடன் அழைத்த முதல்வர்

சென்னை: கருணாநிதி நினைவிடத்தில் 'கனி இங்கே வாம்மா' என தங்கை கனிமொழியை பாசமுடன் அழைத்து தனது பக்கத்தில் நிறுத்திக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதேபோல் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் போதும் தனது சகோதரி கனிமொழி, முரசொலி செல்வம், தயாநிதி மாறன், தமிழரசு ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இணைத்து மலர் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கனிமொழி மீது கருணாநிதி தன் வாழ்நாளின் இறுதிக்காலம் வரை மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பது இங்கு திரும்பிப்பார்க்கத் தக்கது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அமைதிப்பேரணியாக சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதி நினைவிடத்தை அடைந்த பின்னர் தனது தங்கை கனிமொழி இருக்கிறாரா என தேடினார்.

அவர் சற்று தள்ளி நிற்பதை கவனித்த முதலமைச்சர் ஸ்டாலின், 'கனி இங்கே வாம்மா' என பாசத்துடன் கனிமொழியை அழைத்து தனது அருகில் நிறுத்தினார். கனிமொழி மீது கருணாநிதி தன் வாழ்நாளின் இறுதிக்காலம் வரை மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

principal,rajathi ammal,ninivida,kanimozhi,pasam,malaranjali ,
முதல்வர், ராஜாத்தி அம்மாள், நினைவிடம், கனிமொழி, பாசம், மலரஞ்சலி

இதனால் தான் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கனிமொழிக்கு முன்னுரிமை கொடுத்து அவரை அழைத்து தனது பக்கத்தில் நிறுத்தியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதேபோல் தயாநிதி மாறன், முரசொலி செல்வம், தமிழரசு ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்கும் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்ததை காண முடிந்தது.

இதேபோல் அமைதிப் பேரணியின் போதும் உதயநிதி ஸ்டாலின் பின் வரிசையில் தான் நடந்து சென்றார். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் சற்று அவர் ஒதுங்கியே இருந்துக்கொண்டார். கட்சியினரை பொறுத்தவரை ஆ.ராசா, துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேரணியில் பங்கேற்றதுடன் அஞ்சலியும் செலுத்தினர்.

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கையோடு நேராக சிஐடி காலனி இல்லத்துக்கு சென்று ராஜாத்தி அம்மாளை சந்தித்து ஆசி பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கும் கருணாநிதி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

Tags :
|