Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னட நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை - கர்நாடக பா.ஜ.க. விளக்கம்

கன்னட நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை - கர்நாடக பா.ஜ.க. விளக்கம்

By: Karunakaran Sun, 06 Sept 2020 9:52:38 PM

கன்னட நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை - கர்நாடக பா.ஜ.க. விளக்கம்

கர்நாடகாவின் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்திருந்தனர். இதுகுறித்த விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகையாக இருந்து வரும் ராகிணி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையின் போது, போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதனால், நேற்று முன்தினம் மாலையில் நடிகை ராகிணி திவேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

kannada actress,rakini dwivedi,bjp party,karnataka bjp ,கன்னட நடிகை, ராகினி திவேதி, பாஜக கட்சி, கர்நாடக பாஜக

நடிகை ராகிணி திவேதி கடந்த காலங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை என கர்நாடக பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கணக்கான பிரபலங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக சொந்த விருப்பத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், தேர்தலில் பிரசாரம் செய்யும்படி அவருக்கு கட்சியில் இருந்து பொறுப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. அவர் சொந்த விருப்பத்தின்பேரில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கலாம். அவரது சொந்த மற்றும் தொழில் முறை சார்ந்த வாழ்க்கை செயல்பாடுகள் பற்றி பா.ஜ.க. பொறுப்பேற்கவோ அல்லது பதிலளிக்கவோ முடியாது. இதில் இருந்து நாங்கள் விலகியே இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :