Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை

By: Monisha Tue, 01 Dec 2020 12:48:21 PM

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாகவும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2-ம் தேதி மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். இதனால் கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

fishermen,bay of bengal,nivar storm,heavy rain,rp udayakumar ,மீனவர்கள்,வங்கக்கடல்,நிவர் புயல்,கனமழை,ஆர்.பி.உதயகுமார்

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். இது தொடர்பாக கூறியதாவது:-

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

Tags :